தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை: கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி சென்னை வந்தார்


தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை: கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி சென்னை வந்தார்
x
தினத்தந்தி 25 Feb 2021 11:12 AM IST (Updated: 25 Feb 2021 11:12 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி சென்னை வந்தார்.

ஆலந்தூர், 

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன்சாண்டி நேற்று திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் உம்மன் சாண்டியை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

பின்னர் நிருபர்களிடம் உம்மன் சாண்டி கூறும்போது, “தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நாளை (அதாவது இன்று) சந்தித்து பேசுவோம். காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள பேச்சுவார்த்தை குழுவினர் டெல்லியில் இருந்து வந்துள்ளனர். அவர்களுடன் கலந்து ஆலோசித்துவிட்டு தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்யப்படும்” என்றார்.

Next Story