மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்


மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 25 Feb 2021 5:17 PM IST (Updated: 25 Feb 2021 5:17 PM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆரணி

ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு நல சங்கம் சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று 3-வது நாளாக போராட்டம் நடந்தது. கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் சி.அப்பாசாமி, பி. கண்ணன் ஆகியோர் தலைமையில் 41 மாற்றுத்திறனாளிகள் பழைய பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகே ஒன்றுகூடி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், டவுன்  இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட 41 பேரை கைது செய்தனர். 



Next Story