அரக்கோணம் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை- மகன் பலியானார்கள்.
அரக்கோணம் அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தந்தை- மகன் பலியானார்கள்.
அரக்கோணம்
விவசாய நிலத்துக்கு சென்றனர்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள ராமலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 40) விவசாயி. இவரது மகன் அருண்குமார் (14). கோணலம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
பாக்கியராஜ்க்கு சொந்தமான விவசாய நிலம் ராணிப்பேட்டை மாவட்டம் கச்சாம்பட்டு கிராமத்தில் உள்ளது. இவருடைய நிலத்தின் அருகில், உறவினர் ஒருவருடைய விவசாய நிலம் உள்ளது.
மின்வேலியில் சிக்கி பலி
அவர் தனது நிலத்தில் காட்டுப்பன்றி மற்றும் எலிகள் பயிர்களை சேதப்படுத்துவதால் மின்வேலி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாக்கியராஜ் மற்றும் அவருடைய மகன் அருண்குமார் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு தங்கள் விவசாய நிலத்திற்கு சென்றுள்ளனர்.
உறவினரின் விவசாய நிலத்தின் வழியாக சென்றபோது இருவரும் மின்வேலியில் சிக்கி இறந்ததாக கூறப்படுகிறது. காலையில் நீண்ட நேரமாகியும் அவர்கள் திரும்பாததால் விவசாய நிலத்துக்கு சென்று பார்த்தபோது இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மின்சாரவாரிய அரக்கோணம் கோட்ட உதவி செயற்பொறியாளர் புனிதா, அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் அவர்கள் மின்சாரம் தாக்கி இறந்தார்களா என விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story