தூத்துக்குடியில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்


தூத்துக்குடியில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
x
தினத்தந்தி 25 Feb 2021 7:58 PM IST (Updated: 25 Feb 2021 7:58 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ்நிறுத்தம் அருகே நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில இணை செயலாளர் சந்தணசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். டாஸ்மாக் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பிரான்சிஸ், டி.ஜி.டி.இ.யு மாவட்ட தலைவர் புங்கலிங்கம், எல்.எல்.எப் மாவட்ட செயலாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சின்னத்துரை வரவேற்று பேசினார். ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன், டி.ஜி.டி.இ.யு. மாநில பொதுச் செயலாளர் ராஜா ஆகியோர் போராட்டம் குறித்து விளக்கி பேசினர்.
கோரிக்கைகள்
ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், பணியிட பாதுகாப்பு, சுழற்சி முறையில் பணியிட மாறுதல் வழங்க வேண்டும், விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story