காசநோய் விழிப்புணர்வு வார விழா


காசநோய் விழிப்புணர்வு வார விழா
x
தினத்தந்தி 25 Feb 2021 8:42 PM IST (Updated: 25 Feb 2021 8:42 PM IST)
t-max-icont-min-icon

கடம்பூர் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் தேசிய காசநோய் விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது.

கயத்தாறு:
கடம்பூர் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் தேசிய காசநோய் விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். டாக்டர் அருண் விஸ்வநாத் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார். கிராம சுகாதார செவிலியர் ஆவுடைத்தங்கம், சுகாதார மேற்பார்வையாளர் திவ்யா ஆகியோர் பேசினர். உலக காசநோய் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி நடந்தது. போட்டிகளில் பெற்றவர்களுக்கு  டாக்டர் அருண் பிரகாஷ் பரிசு, சான்றிதழ்களை வழங்கினார். கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் காக்கும்பெருமாள் நன்றி கூறினார். ஏற்பாடுகளை காசநோய் பிரிவின் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசிவிஸ்வநாதன் செய்திருந்தார்.

Next Story