மாயமான மாணவியை கண்டுபிடித்து தரக்கோரி தாய் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
மாயமான மாணவியை கண்டுபிடித்து தரக்கோரி தாய் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
கள்ளக்குறிச்சி
கச்சிராயப்பாளையம் அருகே எடுத்தவாய்நத்தம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி கச்சிராயப்பாளையம்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் மற்றும் உறவினர்கள் மாணவியை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் மாணவியை காணவில்லை. இதுபற்றி அவரது தாயார் கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் புகார் கொடுத்து 4 நாட்கள் ஆகியும் மாணவியை போலீசார் கண்டுபிடிக்காததால் மனமுடைந்த அவரது தாயார் விஷம் குடித்ததார்.. இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து மாணவியின் உறவினர்கள் கூறும்போது, மாணவி மாயமான சம்பவத்தில் சந்தேகநபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்து மாணவியின் தாயார் விஷம் குடித்ததாக தெரிவித்தனர். மாயமான மகளை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாயார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கச்சிராயப்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.
Related Tags :
Next Story