வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டம்


வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 25 Feb 2021 10:34 PM IST (Updated: 25 Feb 2021 10:34 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டம்

கள்ளக்குறிச்சி

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், வங்கி இணைப்பு கொள்கையை உடனே கைவிடக் கோரியும் கள்ளக்குறிச்சி மாவட்ட அனைத்து வங்கி ஊழியர் சங்கத்தின் சார்பில் கச்சேரி சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. 
இதற்கு வட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார் எல்.ஐ.சி. ஊழியர் சங்க துணைத் தலைவர் வேலாயுதம், பாபாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம் கண்டன உரையாற்றினார்.  இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story