2-வது நாளாக கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்


2-வது நாளாக கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Feb 2021 10:51 PM IST (Updated: 25 Feb 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில், 2-வது நாளாக கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்:
கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்கு இணையான கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் நாகை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் ஹமீதுபாட்சா தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் மோகன், வட்ட பொறுப்பாளர் செல்லமுத்து, வட்ட துணைத்தலைவர் செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராமஉதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்கு இணையான கால முறை ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700 அடிப்படை ஊதியமாக வழங்க வேண்டும்.
கிராம உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும்.கிராம உதவியாளர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான போனஸ் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பதவி உயர்வு பெற்ற கிராம உதவியாளர்களுக்கு ஓய்வூதிய குறைபாடுகளை கலைந்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story