கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 25 Feb 2021 5:27 PM GMT (Updated: 25 Feb 2021 5:27 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 210 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர், 

பணி நிரந்தரம் செய்திட வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய ஒய்வூதியம் வழங்க வேண்டும். ஒய்வு பெறும் ஊழியருக்கு ரூ.10 லட்சமும், உதவியாளருக்கு ரூ.5 லட்சமும் பணிக்கொடையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

நேற்று 3-வது நாளாக திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பிரேமா தலைமை தாங்கினார்.

கைது

கூட்டுறவு ஊழியர் சங்க மாநில செயலாளர் சவுந்தரராஜன், சி.ஜ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தம்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அங்கன்வாடி ஊழியர்கள் தரையில் அமர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து திருவாரூர் தாலுகா போலீசார் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 210 பேரை கைது செய்தனர்

Next Story