தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
வேளாங்கண்ணி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி அருகே செருதூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவருடைய மகன் தனுஷ்குமார்(வயது18). மீன்பிடி தொழில் செய்து வரும் ஆனந்த் நேற்று மதியம் செருதூர் படகு துறைக்கு சென்று மீன்பிடிக்க செல்வதற்காக தனது மகன் தனுஷ்குமாருக்காக காத்திருந்தார். வெகுநேரமாகியும் வராததால் அவரை தேடி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தனுஷ்குமார் வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கில் தொங்கி உள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தனுஷ்குமார் உடலை மீட்டு வேளாங்கண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தனுஷ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மன உளைச்சல் காரணமாக தனுஷ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story