ஆத்மநாயகி அம்பாள் ருத்ரகோடீசுவரர் கோவில் மாசிமக திருவிழா தேரோட்டம்
எஸ்.வி.மங்களம் ஆத்ம நாயகி அம்பாள், ருத்ர கோடீசுவரர் கோவில் தேரோட்டத்தை குன்றக்குடி ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் தொடங்கி வைத்தார்.
சிங்கம்புணரி,
எஸ்.வி.மங்களம் ஆத்ம நாயகி அம்பாள், ருத்ர கோடீசுவரர் கோவில் தேரோட்டத்தை குன்றக்குடி ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் தொடங்கி வைத்தார்.
திருவிழா
சிங்கம்புணரி அருகே உள்ள சதுர்வேத மங்களம் என்றழைக்கப்படும் எஸ்.வி.மங்களத்தில் உள்ள திருக்கயிலை பரம்பரை குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் திருக்கோவில்களில் ஒன்றான எஸ்.வி மங்களத்தில் உள்ள ஆத்ம நாயகி அம்பாள் உடணுறை ருத்ர கோடீஸ்வரர் ஆலயத்தில் மாசி மகத் திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவையெட்டி மண்டப காரர்கள் சார்பில் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதி உலா வந்தார். தொடர்ந்து 5-ம் நாள் திருவிழாவில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து 6-ம் நாள் சமணர்களுக்கு சாப விமோச்சனம் வழங்கிய விழாவான கழுவன் திருவிழா நடந்தது. தொடர்ந்து 9-ம் நாளான நேற்று தேர் திருவிழா நடைபெறுகிறது. விநாயகர், முருகன், பிரியாவிடை அம்மன் மற்றும் சண்டிகேசுவரர் சப்ர தேர்களிலும், ஆத்ம நாயகி அம்பாள், ருத்ரகோடீசுவரர் பெரியதேரிலும் எழுந்தருளினர். மாலை சரியாக 4.30 மணி அளவில் குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் தேர்வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தேர் 4 ராஜ வீதிகளில் வீதி உலா வந்து நிலையை அடைந்தது.
நேர்த்திக்கடன்
தொடர்ந்து வாழைப்பழம் உள்ளிட்ட பொருட்களை வீசி பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மகா தீபாராதனை காட்டப்பட்டது.
Related Tags :
Next Story