மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் 3 வது நாளாக மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம்,
தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் வழங்கப்படுவதுபோல் தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகையும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 23-ந் தேதி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர், அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தை நடத்தினர். இவர்களை போலீசார் கைது செய்து அந்தந்த பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர்.
இவர்களின் கோரிக்கை நிறைவேறாததால் நேற்று முன்தினம் அந்தந்த திருமண மண்டபங்களிலேயே மாற்றுத்திறனாளிகள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து நேற்றும் 3-வது நாளாக இவர்களின் போராட்டம் நீடித்தது. விழுப்புரத்தில் மாநிலக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தலைமையிலும், விக்கிரவாண்டியில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும், கண்டாச்சிபுரத்தில் மாவட்ட தலைவர் முருகன் தலைமையிலும், திண்டிவனத்தில் மாவட்ட துணைத்தலைவர் பாவாடைராயன் தலைமையிலும், திருச்சிற்றம்பலத்தில் மாவட்ட தலைவர் முருகன் தலைமையிலும் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story