நெல்லை தச்சநல்லூரில் 4 வயது சிறுமி திடீர் சாவு


நெல்லை தச்சநல்லூரில் 4 வயது சிறுமி திடீர் சாவு
x
தினத்தந்தி 26 Feb 2021 12:59 AM IST (Updated: 26 Feb 2021 12:59 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை தச்சநல்லூரில் 4-வயது சிறுமி திடீரென்று இறந்தார்.

நெல்லை:

நெல்லை தச்சநல்லூர் பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் சங்கரன். இவருடைய மகள் சாய்வைஷ்ணவி (வயது 4). சம்பவத்தன்று இரவில் வீட்டில் உள்ளவர்கள் கோழி இறைச்சி சாப்பிட்டுள்ளனர். சாய் வைஷ்ணவியும் இறைச்சி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. 

நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த போது சிறுமிக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக சிறுமியை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

ஆஸ்பத்திரியில் சாய் வைஷ்ணவியை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story