பிரம்மதேசத்தில் ராமர்கோவில் கும்பாபிஷேகம்


பிரம்மதேசத்தில் ராமர்கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 26 Feb 2021 1:11 AM IST (Updated: 26 Feb 2021 1:11 AM IST)
t-max-icont-min-icon

பிரம்மதேசத்தில் ராமர்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

அம்பை:

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள பிரம்மதேசத்தில் சித்தி கணபதி சீதாபிராட்டி சமேத ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

முன்னதாக கடந்த 15-ந் தேதி பந்தல்கால் நடும் விழா நடந்தது. 23-ந் தேதி காலையில் மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜை, மதியம் புனித நீர் எடுத்து வருதல், மாலையில் வாஸ்து சாந்தி, முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. 

நேற்று முன்தினம் இரண்டாம் கால யாகசாலை பூஜை, கடம் எழுந்தருளல்,கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா ஏற்பாட்டின் பேரில் சிறப்பு அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் ராமசுந்தரம், ராமமூர்த்தி, வெங்கடாசலம், முருகன், முத்து மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர். 

Next Story