நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
நெல்லை:
நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் கிராமத்தை சேர்ந்த என்ஜினீயங் கல்லூரி மாணவர் ராஜாமணி. இவர் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் உள்ள உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். குற்றப்பத்திரிகையில் இருந்து உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க விட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பகுதி கிராம மக்கள், சமூக நீதிக்கான மக்கள் கூட்டமைப்பினர், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்டத் தலைவர் கண்மணி மாவீரன், மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்பபாண்டியன் ஆகியோர் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story