திசையன்விளையில் பூ வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு
திசையன்விளையில் பூ வியாபாாி வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை மாணிக்கவாத்தியார் தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 45). பூ வியாபாரியான இவர் கடந்த 23-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டார்.
பின்னர் குருமூர்த்தி வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகள், ரூ.70 ஆயிரம் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து திசையன்விளை போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story