சாத்தூர் வெங்கடாசலபதி கோவிலில் திருக்கல்யாணம்


சாத்தூர் வெங்கடாசலபதி கோவிலில் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 25 Feb 2021 8:20 PM GMT (Updated: 25 Feb 2021 8:20 PM GMT)

சாத்தூர் வெங்கடாசலபதி கோவிலில் திருக்கல்யாணம்

சாத்தூர்
சாத்தூர் வெங்கடாசலபதி கோவிலில் வீற்றிருக்கும் சாத்தூரப்பன், ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி திருக்கல்யாணத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு கோ பூஜை நடைபெற்றது. இதன் பின்னர் 6 மணிக்கு மகாகணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக திருக்கல்யாணம் மதியம் 11.30 மணிக்கு நடைபெற்றது. சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. 
இரவு ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவியுடன் வெங்கடாசலபதி வீதி உலா நடைபெற்றது. திருக்கல்யாண விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தனலெட்சுமி, தக்கார் வௌ்ளைச்சாமி மற்றும் நிர்வாகத்தினரும், உபயதாரர்களும் செய்திருந்தனர்.

Next Story