கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
சாத்தூர்
சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத்தலைவர் மகாராஜன் தலைமை தாங்கினார். வட்டச்செயலாளர் அன்னபாண்டியன், வட்ட பொருளாளர் கணேசன், மகளிர் அணி மலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம உதவியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 4-ம் நிலை ஊழியர் என்ற கோரிக்கையை உடனடியாக வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
மேலும் கிராம உதவியாளர் சங்கத்தினர் தங்களுக்கு காலமுறை ஊதியம் கோரி இரண்டாவது நாளாக நேற்று விருதுநகரில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் முழுவதும் 7 பெண்கள் உள்பட 57 பேர் இப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story