செங்கோட்டை யூனியனில் ரூ.32 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள் முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
செங்கோட்டை யூனியலில் ரூ.32 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கு முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
அச்சன்புதூர்:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை யூனியன் இலத்தூரில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.17.32 லட்சம் மதிப்பில் அரசு நடுநிலைப்பள்ளியில் 2 வகுப்பறைகள் கட்டப்பட உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டி, புதிய வகுப்பறைகள் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.
இதேபோன்று இலத்தூர் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சம் செலவில் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி அமைக்கவும் முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார். இதில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story