ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை


ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 26 Feb 2021 2:10 AM IST (Updated: 26 Feb 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை

மதுரை, பிப்.
திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 45). புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப்பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றினார். இவருடைய மனைவி திவ்யா. இவர் தபால்துறையில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு வழக்கம் போல நடந்த தகராறின் காரணமாக மனம் உடைந்த திவ்யா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக பாண்டியராஜை கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. முடிவில் பாண்டியராஜூக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கிருபாகரன் மதுரம் தீர்ப்பளித்தார்.

Next Story