ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி


ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி
x
தினத்தந்தி 26 Feb 2021 2:11 AM IST (Updated: 26 Feb 2021 2:11 AM IST)
t-max-icont-min-icon

ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி

மதுரை,பிப்
மதுரையில் இருந்து திருமங்கலம் செல்லும் ரெயில் பாதையில் திருப்பரங்குன்றம் ரெயில் நிலையம் உள்ளது. இந்த பாதையில் வெயிலுகந்தம்மன் கோவில் உள்ளது. இந்த பகுதியில் தண்டவாளத்தை கடக்கும் போது அடிக்கடி விபத்து நேரிடுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பைபாஸ் ரோட்டில் பஸ் நிறுத்தத்தை அகற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வந்தது. 
அதனை தொடர்ந்து, அனைத்து டவுன் பஸ்களும் திருப்பரங்குன்றம் நகருக்குள் சென்று வரும்படி இயக்கப்படுகின்றன. இதற்கிடையே, நேற்று சுமார் 45 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முற்பட்ட போது, ரெயிலில் அடிபட்டு உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். 
அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவர் சிவப்பு ஊதா நிறத்தில் கட்டம் போட்ட முழுக்கை சட்டையும் சந்தன நிற பேண்ட் அணிந்திருந்தார். இது குறித்து மதுரை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story