சிதம்பரம் நடராஜர் கோவிலில் மாசி மாத மகா அபிஷேகம்


சிதம்பரம்  நடராஜர் கோவிலில் மாசி மாத மகா அபிஷேகம்
x
தினத்தந்தி 26 Feb 2021 2:15 AM IST (Updated: 26 Feb 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகா அபிஷேகம்

சிதம்பரம், 
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலின் சித்சபையில் உள்ள மூலவரான சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மார்கழி, மாசி மாதங்கள் என ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாசி மாத மகா அபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி மாலை சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்தில் சித்சபை முன்பு உள்ள கனகசபையில் எழுந்தருளினார். அதன்பிறகு இரவு 7.30 மணி முதல் 11 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு விபூதி பால், தயிர், தேன், சர்க்கரை, பஞ்சாமிர்தம், இளநீா், பன்னீா், சந்தனம், புஷ்பம், பழங்கள் மூலம் அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜரை தரிசனம் செய்தனர். மகா அபிஷேகத்துக்கான  ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதா்கள் செய்திருந்தனர். 


Next Story