3-வது நாளாக ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்
ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் 3-வது நாளாக நடந்தது.
ஈரோடு,
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் தங்களது குடும்பத்தினருடன் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை கடந்த 23-ந்தேதி தொடங்கினர்.
இரவில் கடும் பனியை பொருட்படுத்தாமல் விடிய விடிய குடியேறும் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது. மேலும் மாற்றுத்திறனாளிகள் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர்.
Related Tags :
Next Story