வீட்டில் தூங்கிய மூதாட்டி உடல் கருகி பலி
வீட்டில் தூங்கிய மூதாட்டி உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
மங்களமேடு:
குன்னம் வட்டம் வடக்கலூர் அகரம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துக்கருப்பன் மனைவி செல்லம்மாள்(வயது 92). இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. முத்துக்கருப்பன் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், அப்பகுதியில் தகரத்தால் அமைக்கப்பட்ட வீட்டில் செல்லம்மாள் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் திடீரென தீப்பிடித்ததில் கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த செல்லம்மாள் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். செல்லம்மாள் விளக்கை ஏற்றி வைத்து விட்டு தூங்கியதாகவும், அதில் இருந்து கட்டிலில் தீப்பற்றியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story