யுனெஸ்கோ இதழில் பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவியின் கட்டுரை துணைவேந்தர் பாராட்டு
யுனெஸ்கோ இதழில் பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவியின் கட்டுரை இடம்பெற்றதற்கு துணைவேந்தர் பாராட்டு தெரிவித்தார்.
யுனெஸ்கோ இதழில்
பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவியின் கட்டுரை
துணைவேந்தர் பாராட்டு
மணிகண்டம், பிப்.26-
யுனெஸ்கோ மகாத்மா காந்தி கல்வி மற்றும் அமைதிக்கான நிறுவனத்தின் மூத்த அறிஞர்களுடன் தலைமுறைகளுக்கிடையே கல்வி எனும் உலகளாவிய கலந்துரையாடலை நடத்தியது. இதில் உலகம் முழுவதும் இருந்து 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் இந்திய பிரதிநிதியாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரின அறிவியல் துறை மாணவி சுஷ்மிதா கிருஷ்ணன் கலந்து கொண்டார். அவர், கல்வியை மறு வடிவமைத்தல் என்னும் பொருண்மையில் கல்வி கொள்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.
இந்தநிலையில் இவருடைய “வருங்கால ஆசிரியர்கள்-எங்கள் கோரிக்கைகள் மற்றும் கனவுகள்” என்ற தலைப்பிலான கட்டுரை யுனெஸ்கோவின் முதன்மை இதழான நீலப்புள்ளி என்ற இதழில் ‘பிப்ரவரி-21’-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாணவி சுஷ்மிதா கிருஷ்ணனை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் மா.செல்வம், பதிவாளர் (பொறுப்பு) கோபிநாத், ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. திட்ட ஒருங்கிணைப்பாளர் தாஜுதீன் மற்றும் பேராசிரியர் விஸ்வநாதன் ஆகியோர் பாராட்டினர்.
Related Tags :
Next Story