ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 1,000 பேருக்கு அன்னதானம்


ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 1,000 பேருக்கு அன்னதானம்
x
தினத்தந்தி 26 Feb 2021 3:35 AM IST (Updated: 26 Feb 2021 3:35 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 1,000 பேருக்கு அன்னதானம்


திருச்சி, பிப்.26-
ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட செயாலளர் ப.குமார் தலைமை தாங்கி, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்மலை பகுதி சார்பில் கொட்டப்பட்டு அன்பகம் ஆதரவற்ற மாணவர்களுக்கு காலை உணவு வழங்கினார். தொடர்ந்து அரியமங்கலம், திருவெறும்பூர் பகுதிகளில் ஏழை, எளிய பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. லால்குடி தொகுதியில் 73 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதையடுத்து மருத்துவ முகாமும், அ.தி.மு.க. கொடியேற்றி 1,000 பேருக்கு அன்னதானம் மற்றும் பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது. திருவெறும்பூர் தொகுதிக்குட்ட சூரியூரில் பிரியாணி வழங்கப்பட்டது. இதேபோல் திருவெறும்பூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கும்பக்குடி கோவிந்தராஜ் தலைமையில் பாய்லரில் உள்ள அண்ணா தொழிற்சங்க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீநிதி சதீஷ்குமார் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். அப்போது பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.

Next Story