ஓமலூர்-மேச்சேரி இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்


ஓமலூர்-மேச்சேரி இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2021 3:36 AM IST (Updated: 26 Feb 2021 3:36 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர்-மேச்சேரி இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

சூரமங்கலம்:
ஓமலூர்-மேச்சேரி இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
அகல ரெயில்பாதை
ஓமலூர்-மேச்சேரி ரோடு ரெயில் நிலையங்களுக்கு இடையே 2-வது அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் ரெயில்களை இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக நேற்று இந்த பாதையில் ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதற்காக காலையில் டிராலில் சென்று தண்டவாள பாதை மற்றும் சிக்னல்கள் உள்ளிட்டவைகளை தென்னக ரெயில்வேயின் பெங்களூரு ரெயில்வே பாதுகாப்பு ஆணையாளர் அபைகுமார் ராய், சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாஸ் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதிவேக ரெயில்
இதையடுத்து பிற்பகலில் இந்த தண்டவாள பாதையில் அதிவேகமாக ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது நவீன கருவிகள் மூலம் தண்டவாள பாதையின் அதிர்வுகள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் ரெயில் 100 கி.மீ. வேகத்துக்கு மேல் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆய்வின் முடிவுகள் ரெயில்வே துறைக்கு சமர்ப்பிக்கப்படும். அதன்பிறகு அந்த தண்டவாள பாதையில் ரெயில்கள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story