சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கு: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை சேலம் கோர்ட்டு தீர்ப்பு
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
சேலம்:
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
சிறுமி பாலியல் பலாத்காரம்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கோட்டமேடு கருக்கல்வாடி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 23), டிப்ளமோ முடித்துள்ள இவர் கூலிவேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. அதே பகுதியை சேர்ந்த 13 வயதுடைய சிறுமி, அரசு பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். இவருடைய வீட்டுக்கு ராஜசேகர் அடிக்கடி சென்று வந்தார்.
குறிப்பாக சிறுமியின் பெற்றோர் கூலி வேலைக்கு சென்ற பின்னர் ராஜசேகர் அங்கு சென்று ஆசைவார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன் காரணமாக 7 மாதங்களுக்கு பிறகு சிறுமி கர்ப்பமானது குறித்து பெற்றோருக்கு தெரியவந்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
20 ஆண்டுகள் சிறை தண்டனை
அதைத்தொடர்ந்து சிறுமி நடந்ததை தனது பெற்றோரிடம் தெரிவித்தாள். பின்னர் இதுகுறித்து சிறுமியின் தாய் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 29-ந் தேதி ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய ராஜசேகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக ராஜசேகருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story