பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சி.பா.ஆதித்தனார் அறக்கட்டளை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சி.பா.ஆதித்தனார் அறக்கட்டளை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 26 Feb 2021 3:36 AM IST (Updated: 26 Feb 2021 3:36 AM IST)
t-max-icont-min-icon

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சி.பா.ஆதித்தனார் அறக்கட்டளை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்
சி.பா.ஆதித்தனார் அறக்கட்டளை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
பதிவாளர் தகவல்
மணிகண்டம், பிப்.26-
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள பாரதிதாசன் உயராய்வு மையத்தின் சி.பா.ஆதித்தனார் அறக்கட்டளை சார்பாக முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு முனைவர் பட்டம் இறுதி செய்யும் வரை மாதம்தோறும் 2 மாணவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும். மேலும் பாரதிதாசன் பல்கலைக்கழக முனைவர் பட்ட நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மட்டுமே முனைவர் பட்டம் பெற விண்ணப்பிக்க முடியும். எனவே சம்பந்தப்பட்ட மாணவர்கள் இயக்குனர், பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி- 24 என்ற முகவரிக்கு வரும் மார்ச் 31-ந்தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) கோபிநாத் தெரிவித்துள்ளார்.

Next Story