மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் சின்ன தேரோட்டம்


மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் சின்ன தேரோட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2021 3:36 AM IST (Updated: 26 Feb 2021 3:36 AM IST)
t-max-icont-min-icon

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் சின்ன தேரோட்டம் நடந்தது

மேச்சேரி:
மேச்சேரியில் புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசிமக தேர்த்திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி பத்ரகாளியம்மன் கோவிலின் தாய்வீடான பொங்க பாலியிலிருந்து சக்தி அழைத்து கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. இதையொட்டி கோவிலில் இருந்து விநாயகர் தேர், சின்ன தேர் ஆகியவை கிழக்கு கோபுரம், சந்தைப்பேட்டை, கிராம சாவடி, மேற்கு கோபுரம் வழியாக கோவிலை வந்தடைந்தது.
இன்று (வெள்ளிக்கிழமை) விநாயகர் தேரும், பெரிய தேரும் கோவிலில் இருந்து தொடங்கி மேற்கு ரத வீதி கிராம சாவடி அருகில் நிறுத்தப்படுகிறது. நாளை (சனிக்கிழமை) விநாயகர் தேர், பெரிய தேர் கோவிலை அடைதல் நிகழ்ச்சி நடைபெறும். 28-ந்தேதி இரவு சத்தாபரணம், வாணவேடிக்கை, அம்மன் திருவீதி உலாவும், மார்ச் 1-தேதி மஞ்சள் நீராட்டும் நடக்கிறது.

Next Story