இளம்பிள்ளை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை


இளம்பிள்ளை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 26 Feb 2021 3:38 AM IST (Updated: 26 Feb 2021 3:38 AM IST)
t-max-icont-min-icon

இளம்பிள்ளை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இளம்பிள்ளை:
இளம்பிள்ளை அருகே உள்ள இ.காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரும் கருப்பூர் பகுதியை சேர்ந்த பாரதி என்பவரும் கடந்த 2013-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
இந்த நிலையில் பாலகிருஷ்ணன் குடித்துவிட்டு வந்து மனைவி பாரதி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாரதி கோபித்துக்கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.
கடந்த 20-ந் தேதி பாலகிருஷ்ணன் தனது மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்தார். அன்று மாலை கணவர் மற்றும் உறவினர்கள் திட்டியதால் மனமுடைந்த பாரதி வீட்டிலிருந்த மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பாரதி பலனின்றி நேற்று இறந்துவிட்டார் இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் பாரதியின் தாய் ஜெயா புகார் அளித்தார். அதன் பேரில் மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story