வீட்டில் சிறப்பாக மாடித்தோட்டம் அமைத்த மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் பரிசு ஆணையாளர் ரவிச்சந்திரன் வழங்கினார்
வீட்டில் சிறப்பாக மாடித்தோட்டம் அமைத்த மாணவ, மாணவிகளுக்கு சைக்கிளை பரிசாக ஆணையாளர் ரவிச்சந்திரன் வழங்கினார்
சேலம்:
சேலம் மாநகராட்சி பகுதிகளை பசுமையான, சுகாதாரமான, மாசில்லா நகரமாக மாற்றும் வகையில் வீட்டில் உருவாக்கும் மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக்குதல், உரத்தினை வீட்டில் மாடித்தோட்டம் அமைத்து பயன்படுத்துதல், வீடுகளில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத நிலையை உருவாக்குதல், நிலத்தடி நீரை மேம்படுத்தும் வகையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்குதல் போன்ற விழிப்புணர்வை மாணவ, மாணவிகளுக்கு ஏற்படுத்த இந்தியன் வங்கியுடன் இணைந்து சைக்கிள் பரிசு திட்டத்தை சேலம் மாநகராட்சி அறிவித்தது.
அதன்படி மாணவ, மாணவிகளின் விண்ணப்பங்கள் அலுவலர்கள் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு முதற்கட்டமாக 160 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் பரிசாக வழங்கும் விழா தொங்கும் பூங்காவில் உள்ள பல்நோக்கு அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் மாடித்தோட்டம், வீட்டில் குப்பையை உரமாக்குதல், மழைநீர் சேமிப்பு திட்டம் ஆகியவற்றை மிக சிறப்பாக செயல்படுத்திய 5 மாணவ, மாணவிகளுக்கும், திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக சிறப்பு பரிசாக 4 பொதுமக்களுக்கும் ஆணையாளர் ரவிச்சந்திரன் பரிசு வழங்கினார். இதில் மாநகர பொறியாளர் அசோகன், மாநகர் நல அலுவலர் பார்த்திபன், சேலம் மண்டல இந்தியன் வங்கி மேலாளர் உன்னிகிருஷ்ணன், முதன்மை மேலாளர் கலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story