திம்பம் மலைப்பாதையில் ரோட்டில் சுற்றி திரிந்த யானையால் போக்குவரத்து பாதிப்பு


திம்பம் மலைப்பாதையில் ரோட்டில் சுற்றி திரிந்த யானையால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 26 Feb 2021 3:38 AM IST (Updated: 26 Feb 2021 3:38 AM IST)
t-max-icont-min-icon

திம்பம் மலைப்பாதையில் ரோட்டில் சுற்றி திரிந்த யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சத்தியமங்கலம்,
திம்பம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை நேற்று முன்தினம் இரவு மலைப்பாதையின் 4-வது சுற்றில் வந்து நின்றது. அங்கு ரோட்டோரம் உள்ள மூங்கில் மரக்கிளைகளை தின்றது. பின்னர் ரோட்டில் அங்கும், இங்குமாக சுற்றி திரிந்தபடி இருந்தது. இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. யானைக்கு பயந்து சற்று தூரத்திலேயே வாகனங்களில் வந்தவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்திக்கொண்டனர். இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் இருபக்கமும் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. சுமார் ½ மணி நேரத்துக்கு பிறகு யானை தானாகவே வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின்னரே வாகனங்கள் அங்கிருந்து சென்றன.
இதனால் சத்தியமங்கலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story