குண்டர் சட்டத்தில் விவசாயி கைது


குண்டர் சட்டத்தில் விவசாயி கைது
x
தினத்தந்தி 26 Feb 2021 3:39 AM IST (Updated: 26 Feb 2021 3:39 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே குண்டர் சட்டத்தில் விவசாயி கைது செய்யப்பட்டார்.

அந்தியூர்
அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப் பகுதியைச் சேர்ந்தவர் சித்தலிங்கம் (வயது 45)். விவசாயி. இவர் தன்னுடைய தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தார். இதைத்தொடர்ந்து சித்தலிங்கத்தை போலீசார் கைது செய்ததுடன், அவருடைய வீட்டில் இருந்து 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 
இந்த நிலையில் சித்தலிங்கத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, மாவட்ட கலெக்டர் சி.கதிரவனுக்கு பரிந்துரை செய்தார். அவருடைய பரிந்துரையின் பேரில் சித்தலிங்கத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் சட்டத்தில் சித்தலிங்கம் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

Next Story