கும்மிடிப்பூண்டியில் இன்று மின்தடை


கும்மிடிப்பூண்டியில் இன்று மின்தடை
x
தினத்தந்தி 25 Feb 2021 11:49 PM GMT (Updated: 25 Feb 2021 11:49 PM GMT)

கும்மிடிப்பூண்டியில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக மின் வினியோகம் இருக்காது என மின்துறை உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆகவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி, வசந்த பஜார், தபால் தெரு, காந்தி நகர், கோட்டக்கரை, பெரியார் நகர், முனுசாமிநகர், பூபாலன்நகர், திருவள்ளூர் நகர் பாலயோகிநகர், ம.பொ.சி.நகர், விவேகானந்தா நகர், ஏனாதிமேல்பாக்கம், சோழியம்பாக்கம், ரெட்டம்பேடு, மங்காவரம், அப்பாவரம், பெத்திக்குப்பம், சாமிரெட்டிகண்டிகை, சித்தராஜகண்டிகை, ஜி.ஆர்.கண்டிகை, சிந்தலக்குப்பம் போன்ற பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்துறை உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Next Story