மாவட்ட செய்திகள்

சென்னையில் சர்வதேச படவிழா: சிறந்த திரைப்படம் - இயக்குனர் விருது வெற்றி துரைசாமிக்கு கிடைத்தது + "||" + Chennai International Film Festival: Best Film - The director's award went to Duraisamy

சென்னையில் சர்வதேச படவிழா: சிறந்த திரைப்படம் - இயக்குனர் விருது வெற்றி துரைசாமிக்கு கிடைத்தது

சென்னையில் சர்வதேச படவிழா: சிறந்த திரைப்படம் - இயக்குனர் விருது வெற்றி துரைசாமிக்கு கிடைத்தது
சென்னையில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கான விருதுகளை வெற்றி துரைசாமி பெற்றார்.
சென்னை, 

சென்னையில் 18-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 18-ந்தேதி தொடங்கி 8 நாட்கள் நடந்தது. இந்திய திரைப்பட திறனாய்வுக்கழகம் பி.வி.ஆர்.வுடன் இணைந்து இவ்விழாவை நடத்தியது. இதில் 53 நாடுகளில் இருந்து 37 மொழிகளில் 92 திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

தமிழ் திரைப்படங்களுக்கான போட்டி பிரிவிலும் பல படங்கள் மோதின. திரைப்பட விழா நிறைவு நாள் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.

இதில் சிறந்த திரைப்படத்துக்கான விருது, ‘என்றாவது ஒரு நாள்’ என்ற படத்துக்கு கிடைத்தது. சிறந்த இயக்குனருக்கான விருதை, ‘என்றாவது ஒரு நாள்’ படத்தை இயக்கிய வெற்றி துரைசாமி பெற்றார். ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்கள் அவருக்கு வழங்கப்பட்டன. இவர், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் ஆவார்.

இரண்டு விருதுகளை பெற்ற வெற்றி துரைசாமி கூறும்போது, ‘என்றாவது ஒரு நாள்’ எனது முதல் படம். இந்த படம் இதுவரை 27 சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகள் வாங்கி உள்ளது. அதைவிட நமது ஊரில் விருது பெற்றதை சந்தோஷமான தருணமாக கருதுகிறேன். ‘என்றாவது ஒரு நாள்’ படம் கொங்கு மண்டலத்தில் நடக்கும் கதை. ஒரு குடும்பத்துக்கு மாடு எவ்வளவு முக்கியமான விஷயம். அந்த மாடு கைவிட்டு போகும்போது அதை தக்க வைத்துக்கொள்ள அந்த குடும்பம் எந்த அளவுக்கு முயற்சி எடுக்கும். என்ன தியாகங்கள் செய்யும் என்பதை படத்தில் சொல்லி உள்ளோம்.

குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விஷயங்களும் படத்தில் உள்ளன. இதில் நாயகனாக விதார்த், நாயகியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளனர். இளவரசு, மாஸ்டர் ராகவன் ஆகியோரும் உள்ளனர். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதி உள்ளார்'' என்றார்.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரத்துக்கும் சிறப்பு விருது கிடைத்தது. மேலும் திரைப்பட விழாவில் 2-வது சிறந்த படத்துக்கான விருது, ‘சீயான்கள்’ படத்துக்கும், சிறந்த நடிகைக்கான விருது, ‘க.பெ.ரணசிங்கம்’ படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேசுக்கும் கிடைத்தன.