ஏலகிரிமலை பெண் போலீஸ் சிறந்த காவலராக தேர்வு


ஏலகிரிமலை பெண் போலீஸ் சிறந்த காவலராக தேர்வு
x
தினத்தந்தி 26 Feb 2021 4:57 PM IST (Updated: 26 Feb 2021 4:57 PM IST)
t-max-icont-min-icon

ஏலகிரிமலை பெண் போலீஸ் சிறந்த காவலராக தேர்வு

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் சிறந்த காவலர்கள் தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம் மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் வழங்கி வருகிறார். 

அதன்படி இந்த வாரம் ஏலகிரி மலை போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் கந்திலி பகுதியை சேர்ந்த பெண் காவலர் லட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பாராட்டு சான்றிதழ், கேடயம் மற்றும் புத்தகங்களை வழங்கி பாராட்டினார். இதனையடுத்து ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து, ஏலகிரி மலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கராஜ், சங்கர் உள்ளிட்ட போலீசார் லட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story