திருக்காஞ்சியில் மாசிமக தீர்த்தவாரி
திருக்காஞ்சி் மாசிமக தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வில்லியனூர்,
வில்லியனூர் அருகே உள்ள திருக்காஞ்சி காசியில் வீசம்பெற்ற புண்ணியத் தலமான ஸ்ரீகாமாட்சி மீனாட்சி சமேத கங்கவராக நதீஸ்வரர் கோவிலில் மாசி மக பிரம்மோற்சவ விழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது.
விழாவில் 9-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. 10-ம் நாள் நிகழ்ச்சியாக ,இன்று கோவில் அருகே உள்ள சங்கராபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.
இதையொட்டி மதியம் 12.30 மணியளவில் திருக்காஞ்சி கோவில் சார்பில் சங்கராபரணி ஆற்றங்கரையில் தீர்த்தவாரி நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
உற்சவ மூர்த்திகள்
தீர்த்தவாரியையொட்டி சங்கராபரணி ஆற்றங்கரை பகுதியில் அமைந்துள்ள கோவில்களில் இருந்து உற்சவமூர்த்திகள் ஊர்வலமாக வந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
மாசி மகத்தையொட்டி ஆற்றங்கரை பகுதியில் அதிகாலை முதல் திரளான பக்தர்கள் திரண்டு பிதுர் தோஷம் நீங்க முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். இரவு சாமி வீதி உலா நடைபெற்றது.
போலீஸ் பாதுகாப்பு
விழாவில் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் குற்றங்களை தடுக்க 73 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது.
தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஆற்றங்கரையில் தர்ப்பணம் செய்ய ஏதுவாக பாதுகாப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story