சீர்காழி அருகே காரில், சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது


சீர்காழி அருகே காரில், சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 Feb 2021 9:36 PM IST (Updated: 26 Feb 2021 9:36 PM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே காரில் சாராயம் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சீர்காழி, 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வடரங்கம் கொள்ளிடம் ஆற்றங்கரையில் மதுவிலக்கு மத்திய புலனாய்வு பிரிவு போலீஸ் ஏட்டு சாலமன் சார்லஸ் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை வழிமறித்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டபோது அதில் 1,000 சாராய பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து கார் மற்றும் சாராய பாக்கெட்டுகளையும், அதனை கடத்தி வந்த காரைக்காைல ேசர்ந்த திவ்யராஜ் (வயது 41), அப்துல்ரஹ்மான்(38) ஆகியோரையும் சீர்காழி மதுவிலக்கு போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராயம் கடத்திய 2 பேரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

2 பேருக்கு வலைவீச்சு

விசாரணையில் காரைக்கால் நெடுங்காட்டை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் சீர்காழி அருகே உள்ள அகர எலத்தூர் கிராமத்தை சேர்ந்த பெண் சாராய வியாபாரி சூர்யாவுக்கு இந்த சாராய பாக்கெட்டுகளை அனுப்பியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நெடுங்காடு பாஸ்கரன் மற்றும் அகர எலத்தூர் சூர்யா ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்.

Next Story