பக்தர்கள் பூக்குழி இறங்கினர்
பாண்டிமுனீஸ்வரர் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்
தொண்டி,
திருவாடானை தாலுகா இளங்குன்றம் கிராமத்தில் பாண்டி முனீஸ்வரர் கோவில் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியும் பொங்கல் விழா மற்றும் பக்தர்கள் காவடி எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனையொட்டி விரதம் மேற்கொண்டிருந்த ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பாண்டி முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மஞ்சுவிரட்டு, வாணவேடிக்கை கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் ஒன்றிய கவுன்சிலர் அருணாச்சலம், ஊராட்சி தலைவர் இந்திரா ராஜேந்திரன் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதனையொட்டி அன்னதானம் நடைபெற்றது.
Related Tags :
Next Story