கிணற்றில் பிணமாக மிதந்த கல்லூரி மாணவி போலீஸ் விசாரணை


கிணற்றில் பிணமாக மிதந்த கல்லூரி மாணவி போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 26 Feb 2021 10:28 PM IST (Updated: 26 Feb 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் கல்லூரி மாணவி பிணமாக மிதந்தாா்.

மேல்மலையனூர், 

விழுப்புரம் மாவட்டம்  மேல்மலையனூர் அருகே தாயனூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல் மகள் ரிஷாலி (வயது 19). செஞ்சி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டி.பார்ம் முதலாமாண்டு படித்து வந்தார்.

 நேற்று முன்தினம் காலை ரிஷாலி வயிறு மற்றும் நெஞ்சுவலி இருப்பதாக கூறி வீட்டை விட்டு வெளியே  சென்றார். ஆனால் வீட்டுக்கு திரும்பவில்லை. இந்நிலையில் தாயனூர் கிராமத்தில் பாலகோபால் என்பவருடைய நிலத்தில் உள்ள கிணற்றில் ரிஷாலி பிணமாக மிதந்தார்.

தகவலறிந்த அவலூர் பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இளங்கோவன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், தனிப்பிரிவு ஏட்டு முருகவேல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
 ரிஷாலி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story