அக்கராயப்பாளையத்தில் தி.மு.க.வினர் மோட்டார் சைக்கிள் பேரணி
அக்கராயப்பாளையத்தில் தி.மு.க.வினர் மோட்டார் சைக்கிள் பேரணி
கள்ளக்குறிச்சி
வடக்கநந்தல் பேரூராட்சி தி.மு.க. சார்பில் அக்கராயப்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி நகர செயலாளர் சிதம்பரம் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் குணசேகரன், ஒன்றிய இளைஞர்அணி அமைப்பாளர் அருள், செயலாளர் அன்பு, மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கநந்தல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கரிகாலன் வரவேற்றார். மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ. பேரணியை தொடங்கி வைத்தார்.
பேரணியில் கலந்துகொண்டவர்கள் தமிழக அரசின் அவல நிலைகள் குறித்தும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் பொதுமக்களிடையே எடுத்து கூறினர். அக்கராயப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி வடக்கநந்தல், வெங்கட்டாம்பேட்டை, அம்மாபேட்டை ஆகிய கிராமங்கள் வழியாக கச்சிராயப்பாளையம் புதிய பஸ்நிலையத்தில் முடிவடைந்தது. இதில் மாவட்ட தொழில் பிரிவு ஒருங்கிணைப்பாளர் திலிப் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story