கயத்தாறு அருகே நாற்கர சாலையில் பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது.
கயத்தாறு அருகே நாற்கர சாலையில் பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது.
கயத்தாறு, பிப்:
கயத்தாறு அருகே வில்லிசேரி நாற்கரச் சாலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்துகிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என உடனடியாக தெரியவில்லை. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், வடக்கு இலந்தைகுளத்தை சேர்ந்த மாடசாமி (வயது 96), சலவை தொழிலாளி என்பது தெரியவந்தது. இவருக்கு ஆறுமுகம், ஐயப்பன், முருகன், மாரியப்பன் என்ற 4 மகன்களும், கோமதி, பாப்பா என்ற 2 மகள்களும் உள்ளனர். 2-வது மகன் முருகன் வில்லிசேரி அருகே இடைசெவல் கிராமத்தில் வசித்துவருகிறார். தனது மகன் வீட்டிற்கு அடிக்கடி நடந்து செல்வார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு இவர் நடந்து சென்றபோது தண்ணீர் தாகத்திற்காக வெயிலில் ஓரமாக மரத்தின் கிளையில் படுத்து கிடந்தவர் இறந்து போனது தெரியவந்தது. இவரை உறவினர்கள் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் தினத்தந்தி நாளிதழ் பார்த்து கயத்தாறு போலீஸ் நிலையத்துக்கு சென்று உறவினர்கள் கேட்டறிந்தனர். தனது தந்தை எனக்கூறி நேற்று நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை நடத்தி அடக்கம் செய்தனர். இதுகுறித்து கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story