2-ம் போக பயிர் சாகுபடி தொடக்கம்


2-ம் போக பயிர் சாகுபடி தொடக்கம்
x
தினத்தந்தி 26 Feb 2021 11:09 PM IST (Updated: 26 Feb 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் 2-ம் போக பயிர் சாகுபடி தொடங்கி உள்ளது.

ஆர்.எஸ்.மங்கலம், 
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் 2-ம் போக பயிர் சாகுபடி தொடங்கி உள்ளது.
பயிர் சாகுபடி
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கடலூர் ஊராட்சிக்கு உட்பட்ட உப்பூர் பகுதிகளில் உப்பூர் கண்மாய் பாசன பகுதியில் நெல் அறுவடைக்குப் பின் 2-ம் போக பயிர் சாகுபடி தொடங்கி உள்ளது. இதையடுத்து உளுந்து பயிர்  சாகுபடியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். 
பின்னர் அவர் கூறியதாவது:- வயல்வெளியில் பயறு வகை பயிர் சாகுபடி செய்வதன் மூலம் மண் வளம் காக்கப் படுகிறது. மண்ணில் தழைச்சத்து நிலை நிறுத்தப்படுகிறது. மண்ணில் கரிமசத்து மேம்படுத்தப்படுகிறது.  எள் மற்றும் பருத்தி போன்ற பயிர் சாகுபடி செய்வதன் மூலம் மண்ணில் உள்ள அனைத்து சத்துக்களும் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறது.பூச்சி நோய் தாக்குதல் மற்றும் களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது.
கூடுதல் வருமானம்
இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது. எனவே விவசாயிகள் அனைவரும் கண்மாய்களில் உள்ள நீரை வீணாக்காமல் பயறு வகை சாகுபடி செய்து கூடுதல் வருமானம் பெற்று மண் வளத்தையும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
 மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேக் அப்துல்லா, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி, ஆர்.எஸ்.மங்கலம் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி மற்றும் கடலூர் ஊராட்சி  தலைவர் முருகவள்ளிபாலன்ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story