முத்தூர் அருகே டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை திருட்டு


முத்தூர் அருகே டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து  12 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 26 Feb 2021 11:12 PM IST (Updated: 26 Feb 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

முத்தூர் அருகே டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை திருட்டு

முத்தூர்:-
முத்தூர் அருகே  அரசு பஸ் டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார்  தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அரசு பஸ் டிரைவர்
முத்தூர் அருகே உள்ள மேட்டாங்காட்டுவலசு, பொன்தோட்டத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 37). தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ் டிரைவர். இவரது மனைவி சத்யா (32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று முன்தினம்  வீட்டை பூட்டி விட்டு, நத்தக்காடையூர் அருகே உள்ள மருதுறையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள உறவினரை பார்க்க சென்று விட்டனர். 
பின்னர் இருவரும் அங்கிருந்து இரவு 8 மணிக்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இருவரும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது 2 அறைகளிலும் வைக்கப்பட்டு இருந்த 2 இரும்பு பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த  பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
12 பவுன் நகை திருட்டு
பின்னர் பீரோவில் உள்ளே பார்த்த போது அதில் வைக்கப்பட்டிருந்த தங்க சங்கிலி, தங்க மோதிரம், தங்க காசுகள் என மொத்தம் 12 பவுன் நகை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதுபற்றி தகவல் அறிந்த வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் போலீசார்  சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கணேசன், அவரது மனைவி சத்யா ஆகிய இருவரும் தங்களது வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்ற நேரத்தில்  மர்மஆசாமிகள் வீட்டின் மதில் சுவற்றை தாண்டி குதித்து உள்ளே சென்று வீட்டின் முன்பக்க கதவு பூட்டையும், இரும்பு பீரோவையும் உடைத்து உள்ளே இருந்த நகையை திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து நேற்றுகாலை திருட்டு நடந்த வீட்டிற்கு கைரேகை நிபுணர்கள் வந்து  பதிவாகியிருந்த கைரேகைகளை எடுத்து சென்றனர். பட்டப்பகலில் இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story