கலவை அருகேபோலீசை கண்டித்து சாலை மறியல்.


கலவை அருகேபோலீசை கண்டித்து சாலை மறியல்.
x
தினத்தந்தி 26 Feb 2021 5:47 PM GMT (Updated: 26 Feb 2021 5:47 PM GMT)

கலவைஅருகேபோலீசை கண்டித்து சாலை மறியல் நடந்தது

கலவை

கலவை அருகே செய்யாறு- ஆரணி சாலையில் உள்ள கன்னிகா புரத்தில் நேற்று வாழப்பந்தல் போலீசை கண்டித்து சாலை மறியல் நடந்தது. கன்னிகாபுரம், பொன்னமங்கலம், ஆரூர், சஞ்சீவ்புரம் ஆகிய பகுதிகளில் கள் விற்பனை செய்ததாக சிலரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் இப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து நேற்று மாலை 6 மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

தகவலறிந்த கலவை இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி சென்று பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார். அதைத்தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 


Next Story