தாராபுரத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


தாராபுரத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2021 11:20 PM IST (Updated: 26 Feb 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

தாராபுரத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

தாராபுரம்:-
தாராபுரம் தென்தாரை பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்து வந்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை, இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 50 பேர் தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது அவர்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு கோஷம் எழுப்பினர். சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பின்னர் தாசில்தார் ரவிச்சந்திரனை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாங்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தாராபுரம் தென்தாரைபகுதியில் வசித்து வருகிறோம். இதில் 50 குடும்பங்களும் இதுவரை இடமில்லாமல் குறுகிய இடத்தில் மிகவும் சிரமத்திற்கு இடையில் வாழ்ந்து வருகிறோம். நாங்கள் ஏற்கனவே தாசில்தார் மற்றும் சப்-கலெக்டர்  பவன்குமார், தாராபுரம் காளிமுத்து எம்.எல்.ஏ. ஆகியோரிடம் இலவச வீட்டுமனை பட்டா வேண்டி மனு கொடுத்தோம். கடந்த 11-ந்தேதி தாராபுரம் வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடு இல்லாதவர்களுக்கு அரசு செலவில் கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என அறிவித்தார். எனவே  அரசு எங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Next Story