காங்கேயம் அருகே டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி


காங்கேயம் அருகே டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி
x
தினத்தந்தி 26 Feb 2021 11:25 PM IST (Updated: 26 Feb 2021 11:25 PM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி

காங்கேயம்:-
காங்கேயம் ஒன்றியம் பரஞ்சேர்வழி ஊராட்சிக்குட்பட்ட நத்தக்காட்டுவலசு, ஆவாரங்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் தங்கமுத்து (62) விவசாயி இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று தனது டிராக்டரில்  சென்னிமலை கடைவீதிக்கு சென்றுள்ளார். அங்கு வேலைகளை முடித்து விட்டு பின்னர் மாலை அங்கிருந்து கிளம்பி தனது வீட்டிற்கு டிராக்டரை ஓட்டிக்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் சிவியார்பாளையம் என்ற பகுதியில் வந்துகொண்டிருந்தபோது ஒரு வளைவு பகுதியில் தனது டிராக்டரை திரும்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இவரது டிராக்டர் அருகே உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டர் தங்கமுத்துவின் மீது கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே அவர்  உயிரிழந்தார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் இதுகுறித்து காங்கேயம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காங்கேயம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு தங்கமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story