குடியாத்தம் அரசு கல்லூரியில் 2,815 மாணவர்களுக்கு இலவச டேட்டா கார்டு. கலெக்டர் சண்முகசுந்தரம் வழங்கினார்.

குடியாத்தம் அரசு கல்லூரியில் 2,815 மாணவர்களுக்கு இலவச டேட்டா கார்டு. கலெக்டர் சண்முகசுந்தரம் வழங்கினார்.
x
தினத்தந்தி 26 Feb 2021 11:38 PM IST (Updated: 26 Feb 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அரசு கல்லூரியில் 2,815 மாணவர்களுக்கு இலவச டேட்டா கார்டு. கலெக்டர் சண்முகசுந்தரம் வழங்கினார்.

குடியாத்தம்

தமிழக அரசு கல்லூரி மாணவர்களுக்கு ஒருநாளைக்கு 2 ஜிபி டேட்டா இலவசமாக  வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த டேட்டா கார்டு வழங்கும் நிகழ்ச்சி குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

 நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் காவேரியம்மாள் தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் கருணாநிதி, சக்கரவர்த்தி, அருளானந்தன், முரளிகிருஷ்ணா, விஜயரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆவின் தலைவர் த.வேலழகன், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, டி.சி.எம்.எஸ்.தலைவர் ஜே.கே.என்.பழனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் கலந்துகொண்டு 2,815 மாணவர்களுக்கு இலவச டேட்டா கார்டுகளை வழங்கினார். முன்னாள் கவுன்சிலர் ஆர்.மூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் ரமேஷ்குமார், கூட்டுறவு வங்கி தலைவர் வனராஜ் உள்பட அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியை வாசுகி நன்றி கூறினார்.

Next Story