திருவண்ணாமலையில் கிராம ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்
திருவண்ணாமலையில் கிராம ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் பிச்சாண்டி, புஷ்பலதா, இணை செயலாளர்கள் மகாவிஷ்ணு, ஆறுமுகம் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரமணன் வரவேற்றார்.
மாநில செயலாளர் பெருமாள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். முன்னாள் மாநில தலைவர் அன்சர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
இதில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். இயற்கை இடர்பாடு காலங்களில் சிறப்பு படி வழங்க வேண்டும். இரவு காவல் பணியை நிறுத்த வேண்டும். மாவட்ட மாறுதலில் வரும் கிராம நிர்வாக அலுவலர்களை கிராம ஊதியாளர்களுக்கு வழங்கப்படும் 20 விழுக்காட்டில் இணைக்கக் கூடாது என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மாநில செயற்குழு உறுப்பினர்கள் சிவசண்முகம், ஆனந்தி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story